தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டி போராட்டம்

0
298

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னாள் மாபெரும் போராட்டம்முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்து பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.