மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தருவோம் – ஆளுனர் உறுதி

0
2169

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம விஜயம்செய்து ஆலயத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்விலும் கலந்துகொண்டர்.

திங்கட்கிழமை 9ஆம் திகதி விஜயம் செய்த அவர், பூசை வைபவம் நிறைவுபெற்றதும் ஆலய நிருவாகத்தினருடன் கலந்துரையாடினார். இதன்போது, ஆலயத்தின் தீர்த்தக் குளத்தினை புனரமைத்துத் தருமாறு ஆலய நிருவாகத்தினர் கோரியதற்கமைவாக நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளரின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகரசபைபுடன் இணைந்து தீர்த்தக் குளத்தினை புனரமைத்துத் தருவதாக இதன்போது ஆளுனர் உறுதியளித்தார்.

மேலும் ஆலய வளாகம் துப்பரவு செய்யும் பணிக்கு மேலும் தொழிலாளர்களை ஈடுபடுத்த மாநகரசபையுடன் பேசுவதாகவும் அவர் ஆலய நிருவாகிகளிடம் தெரிவித்தார்.

மேற்படி குளம் புனரமைப்பு வேலைகளை எதிர்வரும் ஆண்டு நடைபெறும் திருவிழாவுக்கு முன்னர் முடிவுறுத்தும் வகையில் செயற்படவேண்டும் எனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வீ.தவராஜா , கிழக்கு மாகாணசபை செயலாளர்கள் மற்றும் ஆலய வண்ணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.