தேசியமட்டத்தில் மாறல் நாடகம் முதலிடம்.

0
516

கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட தேசியமட்ட நாடகப்போட்டியில், இலங்கை துறைமுகத்துவாரம் இந்துக்கல்லூரி முதலிடத்தினைப் பெற்றுள்ளது. இதற்கான பரிசளிப்பு விழா கொழும்பில் நேற்று(09) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலங்கை துறைமுகத்துவாரம் இந்துக்கல்லூரி மாணவர்களினால் நடிக்கப்பட்ட மாறல் என்ற நாடகமே, முதலிடத்தினை பெற்றதுடன், நாடகத்திற்காக வழங்கப்பட்ட மொத்தமான பத்து விருதுகளில் நான்கு விருதுகளை  இம்மாணவர்கள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நாடகத்தினை இ.குகநாதன் நெறியாள்கை செய்திருந்தார்.