அது வரும், வரும்” என வாழ்ந்து, கிழக்கு மாகாண தமிழர்கள் இருப்பதையும் இழக்க கூடாது.

0
388

வடக்கு கிழக்கு இணைப்பு இப்போதைக்கு வரப்போவதில்லை. அதற்கான சாத்தியம் தற்சமயம் இல்லை. அந்த சாத்தியம் இருந்த வேளையில் அதை கை நழுவ விட்டாச்சு. எனவே இன்று சும்மா இணைப்பு பற்றி பேசுவோம், இணைப்பு வந்தால் முஸ்லிம் தனி அலகு பற்றி பேசுவோம் என்று முஸ்லிம் காங்கிரசும், கூட்டமைப்பும் அறிவிப்புகள் விடுவது காலத்தை வீணடிக்கும் வேலை. இப்படி சொல்லித்தான் இரண்டு கட்சிகளும் இரண்டு ஆண்டுகள் கிழக்கில் கூட்டாட்சி நடத்தினார்கள். ஒன்றும் ஆகவில்லை. இருந்த தமிழ்-முஸ்லிம் உறவு கிழக்கில் இன்னமும் கெட்டதுதான் மிச்சம். எனவே அது வரும்போது பார்த்துக்கொள்வோம் என கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களை அரசியல்ரீதியாக ஸ்திரப்படுத்திக்கொள்ள வழி தேட வேண்டும். குறிப்பாக “இலவு காத்த கிளியை” போல இணைப்பை எதிர்பார்த்து “அது வரும், வரும்” என வாழ்ந்து, கிழக்கு மாகாண தமிழர்கள் இருப்பதையும் இழக்க கூடாது.

Mano Ganesan   முகப்புத்தகத்திலிருந்து.