இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடும், மாண்புறு தமிழர் விருது வழங்கலும் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ணில் மிக விமரிசையாக நடைபெற்றது. சுவிஸ் அன்னை இல்லம் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் சுரேஸ் செல்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இனிய நந்தவனம் சிறப்பிதழின் முதலாவது பிரதியை திருமதி சிவலோஜினி கந்தையா அவர்கள் இதழாசிரியர் சந்திரசேகரனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஆன்மீகவாதிகளான ஸ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், நாடகர் அன்ரன் பொன்ராசா, அரசியல் செயற்பாட்டாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம், ஊடகவியலாளர் சண் தவராஜா ஆகியோர் மாண்புறு தமிழர் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டனர்.
நிகழ்வில் இலக்கியவாதி கல்லாறு சதீ~;, தூண் மாநகரசபை உறுப்பினர் தர்~pக்கா கிருஸ்ணானந்தம் வடிவேல் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். ‘பிள்ளைகளின் ஆளுமையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவது தாயா? தந்தையா’ என்ற தலைப்பிலான பட்டிமன்றம், சுவிஸ் சுரேஸ்அவர்களின் நெறியாள்கையில் உருவான ‘எண்ண விடுங்கோ’ நாடகம் பரதம், மேற்கத்தேய நடனம், கரோக்கே பாடல் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. .







