வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு 2000 குடும்பங்கள் பயன் பெறும். பொறியிலாளர் எஸ்.பழனியப்பன்

0
402

 

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள புனரமைப்பு செய்யவும், அதன் இயந்திரங்களை திருத்தம் செய்வதற்காக இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் வாழைச்சேனை கடதாசி ஆலையை முதற்கட்டமாக நேற்று மாலை பார்வையிட்டனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தொழிலாளர்களினால்  வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் பூசைகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், ஆலய குரு அ.விக்னேஸ்வரமூர்த்தி குருக்களினால் பூசைகள் இடம்பெற்றது.

இங்கு வருகை தந்த மட்;டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் மற்றும் முன்னாள் ஆலையின் தவிசாளர் தேசமான்ய  மங்கள சீ செனரத் ஆகியோர் வரவேற்கப்பட்டு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

பின்னர் பூசைகளில் கலந்து கொண்ட பின்னர் ஆலையின் நிலைமைகள், இங்கு காணப்படும் இயந்திரங்களில் நிலைமைகள் தொடர்பாக இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் சென்று பார்வையிட்டனர்..

இக்கடதாசி ஆலை இருமுறை தொழில் விருதுகளை வென்ற ஒரு பழம் பெரும் தொழிற்சாலையாகும். இக்கடதாசி ஆலையானது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்த இடமாகும். இக்கடதாசி ஆலை இயக்குவதற்கு பல முயற்சிகளை தான் எடுத்துள்ளதாகவும், இக்கடதாசி ஆலையை மீள இயக்குவதற்கு உதவிய இந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகர் பாஸ்கரன், கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியூத்தின், எதிர்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன், முக்கிய இப்பாரிய முதலீடுகளை இந்நாட்டிற்கு கொண்டு வந்த முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள சீ செனரத் ஆகியோருக்கு  நன்றியினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இத்தொழிற்சாலையை கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் இங்குள்ள இயந்திரங்களை திருத்தி அமைத்து சுமார் இருபது வருடங்களுக்கு பயன்படுத்துவதற்கேற்ற முறையில் மாற்றுவோம். இங்குள்ள இயந்திரங்கள் மிகவும் உறுதி வாய்ந்த மீள பயன்படுத்தக்கூடிய ஆயுட்கால உத்தரவாதம் கொண்டு ஜேர்மன் வோய்த் இயந்திரமாகும்.

இவ்வியந்திரங்களை திருத்துவதன் மூலம் சுமார் 100 மெட்றிக் காகிதங்களை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும், ஒரு நாளைக்கு முப்பது லட்சம் பெறுமதியான காகிதங்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் காரணத்தினால் 2000 குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இந்திய தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த எஸ் வீ கைத்தொழில்சாலையி;ன பிரதம பொறியிலாளர் எஸ்.பழனியப்பன் தெரிவித்தார்.