மட்டக்களப்பில் பாரிய கொள்ளை68இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் ஒரு இலட்சம் ரூபா பணம்

0
507

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கல்லடி உப்போடை பகுதியிலுள்ள வீடொன்றில் வியாழக்கிழமை இரவு  (5.1.2017) சுமார் 125 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்..

கல்லடி உப்போடை பகுதியிலுள்ள தங்க நகைகள் செய்யும் நகை வியாபாரியான வி.யோகராசா என்பவரின் வீட்டிலேயே இத் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் அவர்களின் மற்றொரு வீட்டுக்கு சென்றிருந்த  சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுரிமையாளர்கள் வியாழக்கிழமை மாலை வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கதவு  உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் வீட்டினுள்ளும் வெளிப்பகுதியிலும் அதிகளவிலான மிளகாய்த்  தூல்கள் காணப்பட்டதாகவும் வீட்டினுள் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டி காணாமல் போய் இருந்தததையும் அவதானித்துள்ளனர். அத்துடன் விட்டு அலுமாரி உடைக்கப்பட்டும் இருந்துள்ளது.

இதையடுத்து தமது தங்க நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டி திருடப்பட்டுள்ளதை உனர்ந்த வீட்டுரிமையாளர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்தி முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் எட்டவர உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமர சிறி ஆகியோரது ஆலோசனையின் பேரிலும் வழிகாட்டலிலும் துரிதமாக விசாரணையில் ஈடுபட்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராய்ச்சி மற்று ஐ.பி.ஆர். ஜெயஜீலன் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்த வீட்டு உரிமையாளர் வழங்கிய தகவலையடுத்து அங்கு நகை வேலை செய்த நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சந்தேக நபர்கள் வழங்கிய தகவலையடுத்து அந்த  நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை புதைத்து வைத்திருந்த இடமான திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பொலிஸ் பிரிவிலுள்ள தெனியாய காட்டுப் பகுதிக்கு சென்று அதனை மீட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அதனை உடைத்து அதில் இருந்த நகைகளை மீட்டெடுத்தனர்.

இதிலிருந்து 125 பவுன் தங்க நகைகள் மற்றும் சுமார் ஒரு இலட்சம் ரூபா பணம், மற்றும் வெளிநாட்டு நாணயம் என்பவற்றையும் குறித்த சந்தேக நபர்கள் இதற்காக பயன் படுத்திய மோட்டார் சைக்களையும் கைப்பற்றினர். இது சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியானதாக இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாருக்க அறிவிக்கப்பட்டு மூன்று மணித்தியாலயங்களுக்குள் இந்த திருட்டை பிடித்ததுடன் இந்த நகைகளையும் மீட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நான்கு சந்தேக நபர்களும் மேற்படி நபரிடம் பல வருடங்களாக தங்க வேலை  செய்யும் தொழிலாளர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து பொலிசார் இது தொடர்பில் விசாரணை செய்து வருகின்றன