மட்டக்களப்பில் பால்வியாபாரியின் மகன் கல்குடா வலயத்தில் முதலாமிடம்

0
1073

(டினேஸ்)

கல்குடா கல்வி வலய மட்/ககு/முறாவோடை சக்தி வித்தியாலய மாணவன் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வலய ரீதியில் 01ம் இடம் பெற்று சாதனை.

முறாவோடை என்பது அன்மைக் காலங்களாக ஊடகங்களில் மிக பிரபல்யமாக குறிப்பிடப்பட்ட ஒரு பழம்பெரும் கிராமத்தின் பெயராகும். அதாவது   கோறளைப்பற்று பிரதேசத்தின் முதல் ஆதி தமிழ் கிராமமாகும்.  இங்கு வாழும் மக்கள் கடந்த யுத்த காலத்தில் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த நிலையில் தற்போது வாழ்வாதாரப் பிரச்சினைகள், காணி அத்துமீறல் பிரச்சினைகளை எதிர்நோக்கிக்கொண்டு வருகின்றனர்….

இந்த சூழ்நிலையில் மட்/ககு/முறாவோடை சக்தி வித்தியாலயம் 125 ஆண்டுகள்  வரலாற்றை கடந்த நிலையில் இவ்வருடம் 2017ல் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் இப்பாடசாலையில் கல்வி கற்கும் செல்வன் பிரதீபன் நிதுர்சன் 182 புள்ளிகள் தகமை பெற்று சித்தியடைந்து வலய ரீதியில் 01ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்… முறாவோடை சக்தி வித்தியாலயத்தில் பல்வேறுபட்ட பௌதீக வளம், கற்றல் கற்பித்தல் வசதிகள் குறைவாகக் காணப்படுகின்ற நிலையிலும் இப்பரீட்சையில் சித்தியடைந்து,  இம்மாணவன் பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்தள்ளார்.

இந்த மாணவனது தந்தை தினந்தோறும் நெடுந்தூரம் பயணம் செய்து, மாட்டுப் பட்டியில் பால் சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமாணத்தைக் கொண்டு தனது அன்றாட வாழக்கையையும், தனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவனின் இச்சாதனை வெற்றிக்கு ஊக்கமளித்த பெற்றோர்கள், கற்பித்த  ஆசிரியர் யோகநாதன் அவர்கள், வழிநடத்திய அதிபர் சுதாகரன் அவர்கள் மற்றும் ஏனைய பாடசாலை சமூகத்தினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.