சம்மாந்துறை வலயத்தில் 118 பேர் சித்தி! மாவட்டத்தின் இரண்டாம்நிலை சாதனையாளர்சுதர்சன் ஜிவானுஜா

0
480
இம்முறை வெளியான தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி சம்மாந்துறை வலயத்தில் 118 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளார்கள்.
 

வலயத்திலுள்ள 3கோட்டங்களில் சம்மாந்துறைக்கோட்டத்தில் 88மாணவர்களும் நாவிதன்வெளிக்கோட்டத்தில் 18பேரும் இறக்காமம் கோட்டத்தில் 12பேரும் சித்தியடைந்துள்ளனர்.இப்பெறுபேறு  பின்தங்கிய தமது பிரதேசத்தைப்பொறுத்தவரை  மகிழ்ச்சியளிப்பதாக  சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தெரிவித்தார்.
 
பணிப்பாளர் நஜீம் இப்பெறுபேறு தொடர்பாகக்கருத்துரைக்கையில்:
 
இம்முறை எமது மாணவர்கள் மிகவும் இறுக்கமான சூழலில் பரீட்சைக்குத்தோற்றியிருந்தார்கள். வெளிமாகாண வேற்றின உயரதிகாரிகளின் நேரடிக்கண்காணிப்புகள் பல்வேறு வதந்திகள் பல்வேறு நெருக்குவாரங்கள் பொறாமைகள் அத்தனைக்கும் மத்தியில் இச்சாதனை படைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
 
அம்பாறை மாவட்டத்தின் இரண்டாம் நிலை சாதனை மாணவி எமது வலயத்தைச்சேர்ந்தவராவார். சுதர்சன் ஜிவானுஜா எமது வலயத்தின் சம்மாந்துறைக்கோட்டத்தின் பின்தங்கிய கிராமமான  மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலை மாணவியான சுதர்சன் ஜிவானுஜா ஆவார்.அவர் 187புள்ளிகளைபபெற்று மாவட்டத்தின் 2ஆம் நிலையிலுள்ளார். இவரது பாடசாலையில் இம்முறை 11மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர். அதிபர் சுந்தரநாதன் கற்பித்த விமலகீதன் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
 
கடந்தவருடத்தோடு ஒப்பிடுகையில் ஒப்பீட்ளவில் சம்மாந்துறைக்கோட்டத்தைவிட நாவிதன்வெளி இறக்காமம் கோட்டப்பாடசாலைகள் கூடுதல்பெறுபேற்றைப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
 
இச்சாதனைக்காக உழைத்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் அதிபர்கள் கல்விஅதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் நன்றியுடன் வாழ்த்துகின்றேன்.சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகின்றேன்.என்றார்..