மட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்

0
369

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்டப்போட்டியிலே குறித்த பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கும் பண்டதரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்திற்கும் இடையில் இறுப்போட்டி நடைபெற்றதுடன், போட்டியில் 23புள்ளிகளை ஜெசிந்தா வித்தியாலய மாணவர்களும், 30புள்ளிகளை பழுகாமம் கண்டுமணி வித்தியாலயமும் பெற்று ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் பழுகாமம் கண்டுமணி வித்தியாலயம் முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. இதேவேளை கபடி விளையாட்டினை பயிற்றுவித்த ஆசிரியர் இ.புவேந்திரகுமார்(புவி) மற்றும் கி.கிருஷ்ணராஜன் ஆகியோருக்கும் வெற்றி மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை அதிபர் சு.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கபடி போட்டியில், பழுகாமம் கண்டுமணி வித்தியாலய மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.