மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பட்டிப்பளைக் கோட்டம் முதலிடம்

0
945

(படுவான் பாலகன்)  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 49மாணவர்கள் வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்பற்று ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய இவ்வலயத்தில் பட்டிப்பளை கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களே அதிகம் மாவட்;ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றனர். பட்டிப்பளை கோட்டத்தில் 32மாணவர்களும், வவுணதீவு கோட்டத்தில் 14மாணவர்களும், ஏறாவூர் கோட்டத்தில் 03மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்குமேல் பெற்றிருக்கின்றனர்.
வெளியாகியுள்ள பெறுபேற்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலய மாணவன் 185 புள்ளிகளைப்பெற்று வலயத்தில் முதலிடத்தினையும், முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஒன்பது மாணவர்கள் மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்று வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையென்ற பெயரினையும் பெற்றுள்ளது.


தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 51மாணவர்கள் மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்றிருந்த நிலையிலும் இவ்வருடம் அவை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே போன்று பட்டிப்பளைக் கோட்டம் கடந்த ஆண்டைவிட இவ்வருடம் கூடிய மாணவர்களை மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறவைத்த கோட்டமாகவும் விளங்குகின்றது.