கிழக்கு மாகாண ஆளுநர் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இடமாற்றத்தினை இரத்து செய்யவேண்டும்.

0
870
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளரின்கிழக்கு மாகாண ஆளுநர்  மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இரத்து செய்யவேண்டும். என கிழக்கு மாகாண ஆளுநரை கேட்டுக் கொள்வததாக முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்..

  பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளரின் இடமாற்றத்தினை கண்டித்து பட்டிருப்பு வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
    குறித்த வலயக்கல்வி பணிப்பாளரின் இடமாற்றமானது அரசியல் பழிவாங்கலாக மக்கள் தெரிவிக்கின்றன். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே இறுதியாக கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்தது. கல்வி அமைச்சரும் எமது கட்சியை சாரந்தவர் எனவே குறித்த இடமாற்றத்திற்கும் தமிழித்தேசியக் கூட்டமைப்பிற்கும் சம்பந்தம் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இது எமது ஆட்சிகாலத்தில் எமக்கு ஏற்பட்ட அவப்பெயராக நான் கருதுகின்றேன்.
  ஆசிரியர்களுக்கான இடமாற்றம் வருட இறுதியில்தான் நடைபெறவேண்டும் என ஆளுநர் அறிவித்துள்ளதாக அறிகின்றேன் ஏன் பணிப்பாளர்களின் இடமாற்றத்தினை வருடம் முடிவதற்கு முன்னர் மேற் கொள்ளவேண்டும். இதனால் பல கல்வி வலயங்கள் குழப்ப நிலையில் காணப்படுகின்றது. இக் குழப்ப நிலைக்கு  புதிதாக வந்த ஆளுநர் குழப்பி விட்டார் என்ற பெயரினை நீங்கள் மக்கள் மத்தியில் பெற்றுக் கொள்ள வேண்டதம் என நான் உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.
  இவ்விடமாற்றத்தில் முறைகேடு இடம்பெற்றுள்தக நான் அறிகின்றேன் காரணம் இவ் இடமாற்றப்பட்டியலில் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்காத அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  அது மாத்திரமின்றி இடமாற்றப்பட்டியலில் உள்ள சில அதிகாரிகளின் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது, மற்றும் சில வலயங்களில் ஐந்துவருடங்களுக்கு மேலாக கடமையாற்றியவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான நிலையி 56,59 வயசுகளைக் கொண்ட அதிகாரிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மாவட்டத்திற்கு வெளியே இடம்மாற்றியமைக்கான காரணம் என்ன? இதுதான் நல்லாட்சியின் இலட்சணமா? ஏன மக்கள் வினாவுகின்றனர்.  இது முற்றிலும் சட்டத்திற்கு முரணான இடம்மாற்றம் என்பதுடன் அதிகாரிகளின் உரிமையை மீறும் செயலாகவே நான் கருதுகின்றேன்.
   நல்லாட்சி அரசில் முறைகேடான, சட்டத்திற்கு முரணான,  எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமில்லை என்பது நல்லாட்சியின் வாசகமாக இருந்து வருகின்ற தருணத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அதனை கேள்விக்கு உட்படுத்தும் என்பதில் ஜயமில்லை. எனவே கிழக்கு மாகாண ஆழுநர் குறித்த இடாமாற்ற விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து இதனை இரத்து செய்து முறைப்படி மேற் கொள்ளவேண்டும். இவ்விடயத்தில் எந்தவித அரசியல் தலையீடுகளை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டாம். இதனால் எமது கட்சிக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன் கிழக்கு மாகாண சபைக்கும் அவப்பெயரை உண்டாக்கும். அது ஆழுநர் என்ற வகையில் உங்களையும் எதிகாலத்தில் பாதிக்கலாம் எனவே இவ்விடமாற்றத்தினை இரத்து செய்து உரியமுறைப்படி உரியகாலத்தில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்தார்…