எதிர்வரும் காலங்களில் நடத்தவிருக்கும் பணிபகிஸ்கரிப்பில் அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

0
484
ஆசிரியர்களின் மேலதிக வேலைகளை குறைத்து வகுப்பறையில் சுதந்திரமாக கற்பிப்பதற்கான உரிமையை வென்றெடுக்கும் முகமாக எதிர்வரும் காலங்களில் நடத்தவிருக்கும் பணிபகிஸ்கரிப்பில் அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என  மேல் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமாகிய மகிந்தஜெயசிங்க தெரிவித்தார்..

 பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுடான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில் தெரிவிக்கையில்.
   ஆசிரியர்கள் மாணவர்களின் குறைபாடுகளை சுட்டிகாட்டி அவற்றினை வென்றெடுப்பதற்காக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு எதிராக பலதரப்பட்ட போராட்டங்களை நாங்கள் நடளாவிய ரீதியில்  நடாத்தி வெற்றிகண்டுள்ளோம். அண்மையில் மாணவர்களின் சீருடை சம்பந்தமான பிரச்சினையில் நாங்கள் தலையிட்டு வெற்றிகண்டுள்ளோம். சைட்டம் மூலம் மாணவர்களின் கல்வியை விற்கும் நடவடிக்கைக்கு எதிராகவும் நாங்கள் போராடியிருக்கின்றோம். வித்தியாவின் படுகொலைக்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நாடத்தியிருக்கின்றோம். இவ்வாறு ஆசிரியர்கள், மாணவரகளின் நலனுக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம்.
   இதே போன்று எதிரவரும் காலத்தில் நாங்கள் நாடளாவிய ரீதியில் பாரிய பணிபகிஸ்கரிப்பு ஒன்றினை முன்னெடுக்க இருக்கின்றோம். அந்தவகையில்  தற்போது பாடசாலைகளில்  கற்பிக்கும் செயற்பாடுகளை பின்தள்ளி ஆசிரியர்களுக்கு பலதரப்பட்ட மேலதிக வேலைகள் திணிக்கப்பட்டுள்ளது.
   இதனால் ஆசிரியர்கள் தங்களது சுதந்திரமான கற்பித்தலை மேற்கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். அதேவேளை திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் ஒரு தரமான கற்றல் நடவடிக்கையையே ஆசிரியர்களிடம் கேட்கின்றனர். அதற்காக பல்வேறு திட்டங்களை தயாரித்து பாடசாலைக்கு அனுப்பிவைக்கின்றனர் இதனுடன் ஒரு ஆசிரியர் மேலதிக வேலைகளை இணைத்துக் கொண்டு எவ்வாறு செய்து முடிப்பது இதனால் ஒரு ஆசிரியர் பாடசாலையில் 10 மணித்தியாலங்கள் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று அதிபர்களும் பலதரப்பட்ட வேலைப்பழுக்களுக்கு மத்தியில் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எங்களின் முயற்சியால் தற்பொழுது ஆசிரியர்களுக்கு சுமையாக இருந்த பாடசாலை மட்ட கணிப்பீட்டின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது போன்று எதிர்காலத்தில் ஆசிரியர்கள், அதிபர்களுக்கான மேலதிக வேலைப்பழுக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும். அது மாத்திரமின்றி மேலதிக வேலைகளை பாடசாலையில் மேற் கொள்வதற்கு அளணிகளை நியமிப்பதற்கும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
   எனவே ஆசிரியராகிய நீங்கள் இவற்றினை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் எங்களால் முன்னெடுக்க இருக்கின்ற பணிபகிஸ்கரிப்பில் இணைத்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் இதன்போது தெரவித்தார்