தாந்தாமலையில் பத்தாயிரம் பனம்பருப்புக்கள் நடுகை.

0
554

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலைப் பகுதியில் பத்தாயிரம் பனம்பருப்புக்கள் இன்று(02) திங்கட்கிழமை நடப்பட்டன.
தாந்தாமலை கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும்  270பேர் இணைந்து, இப்பனம்பருப்புக்களை நட்டனர்.
தாந்தாமலை கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்கள் அடிக்கடி யானையினால் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்பொருட்டு யானை தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளுவதற்காக, கிராமங்களுக்குள் யானை புகுவதனை தடுக்கும் நோக்கில், பனம் மரங்களை உருவாக்குவதற்காக, யானை வேலியின் அருகாமையில் நெருக்கமாக பனம்பருப்புக்கள் நடப்பட்டன.
கிராமசேவை உத்தியோகத்தர் ய.சயந்தனின் ஏற்பாட்டில் நடைபெற்ற, இந்நிகழ்வில் வனவள, வனஜீவராசிகள்;, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
முதன்முறையாக யானை கிராத்திற்குள் நுழைவதனை தடுக்கும் நோக்கில் பத்தாயிரம் பனம்பருப்புக்கள் இப்பிரதேசத்தில் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.