கொக்கட்டிச்சோலையில் சிறுவர், முதியோர் தின நிகழ்வு

0
668

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுவர், முதியோர் தினக் கொண்டாட்டம் நேற்று(01) ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

“தாய், தந்தை முதியோரின் அன்பு பாசப்பிணைப்புனூடாக, சிறுவர்களை அவர்களது அதிசயமிக்க உலகிற்கு கொண்டு செல்வோம்” என்ற தொனிப்பொருளில் சிறுவர் தினமும், “முதியோர்களின் திறமை, பங்களிப்பு மற்றும் பங்குபற்றுதலுடனான எதிர்காலத்தை நோக்கி கால்பதிப்போம்” என்ற தொனிப்பொருளில் முதியோர் தினமும் கொண்டாடப்பட்டன.

 

சிறுவர், முதியோர் தினத்தினை சிறப்பித்து சிறுவர்களின் நடன மற்றும் கலை நிகழ்வுகளும், முதியோரின் பாரம்பரிய கலைநிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், சமூர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவும் இணைந்து இந்;நிகழ்வினை நடாத்தினர். பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில், முதியோர்கள், சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.