கற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.

0
724
Teaching calling on student in classroom
Teaching calling on student in classroom

மாணவர்கள் தமது அறிவுஇ திறன்கள்இ மனப்பான்மைஇ விழுயங்கள் ஆகியவற்றை வளர்த்து நற்குடிகளாக வாழ உதவும் பணியே கற்பித்தல் என்று கல்வியியலாளர்கள் கூறுவர். இத்தகைய பணியை ஆற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். ஆசிரியர்களின் சிறப்பினை எம்முன்னோர் நன்றாக அறிந்திருக்கின்றனர். மாதாஇ பிதாஇ குருஇ தெய்வம் எனக்கற்பிக்கும் ஆசானின் நிலையைக் காட்டியுள்ளனர்.

“ஆனது பற்றியே அறிவுக்கண் வழங்கும் ஆசான்”;இ “எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்று கடவுளுடன் ஒப்புமைப்படுத்திப் பேசுகின்றனர். “ஆசான் எப்படியோ பாடசாலையும் அப்படியே” என்பது பழமொழி. ஆழகான கட்டடங்கள்இ நவீன பாடப்புத்தகங்கள்இ தாராளமான ஆய்வகவசதிகள்இ அளவற்றகற்பிக்கும் சாதனங்கள்இ பெரிய நூலகங்கள் இவை அனைத்தும் ஒரு பாடசாலைக்கு வாய்த்திருப்பினும் அது சிறந்த பாடசாலை என்று சொல்வதற்கில்லை. இவை அனைத்தும் புறத்தோற்றமாகவே தென்படும். அவற்றினுள்ளே உயிர் நாடியாக இருப்பது ஆசிரியர்களே. நல்ல ஆளுமைப்பண்பு உள்ளஇ உட்சாகமுள்ள ஆசிரியர்கள் ஒரு பாடசாலையில் இல்லாவிட்டால் அனைத்தும் வீணே .அவை விழழுக்கிறைத்த நீராகவே முடியும். “உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் எல்லாவற்றையும் விட ஆசிரியரே மிகவும் செல்வாக்குள்ள ஒரு கூறு. கற்றல் ஏற்பாட்டில் அமைப்புஇ தளபாடங்கள் முக்கியமாயினும் உயிர்புடன் இயங்கும் ஆசிரியரின் ஆளுமையால் உணர்வூட்டம் பெறாவிட்டால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறா” என்று பிரௌன் என்னும் மேனாட்டுஅறிஞர் கூறுகிறார். ஒரு நாட்டின் பெருமை அதன் பரப்புஇ மலைகள்இ காடுகள்இ ஆயுதசாலைகள் ஆகியவற்றைப் பொருத்ததன்று. அது அந்தநாட்டின் பாடசாலையையும் ஆசிரியரின் தன்மையையும் பொறுத்ததாகும். இப்பேறு ஆசிரியருடையது என்பது வெளிப்படையானது. எல்லாத்தொழிலும் சமூகசேவையாயினும் வருங்கால நற்குடிகளை உருவாக்கும் அருட்பணி ஆசிரியர் பொறுப்பில்தான் இருக்கின்றது. மாணவர்களின் உடல் உள்ளம் நடத்தை முதலியவற்றைச் சீர்திருத்தி அவர்களிடம் சிறந்ததோர் ஆளுமையை வளர்ப்பது ஆசிரியரின் கையில்தான் இருக்கின்றது..

மாணவர்களைப் பற்றி சரியாக அறிந்து கொள்வதோடு தன்னுடைய அறிவையும் வளர்க்கும் முறையையும் மிகக்கவனத்துடன் திறனாய்ந்து அறிவதில்தான் ஆசிரியத் தொழிலின் வளர்ச்சி அடங்கியுள்ளது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்றுள்ள ஆசிரியர் தன் தொழிலில் சிறந்து விளங்கவும் அதனை வினைத்திறன் கொண்டதாக மேற்கொள்ளவும் ஆசிரியர் வாண்மை பெற்றவராகக் காணப்பட வேண்டும். ஆசிரிய வாண்மை என்பது ஒரு குறித்ததுறை தொடர்பான சரியான அறிவும்இ சுதந்திரமாகச் செயற்படும் திறனும்இ எதனையும் தயங்காமல் பொறுப்பேற்கும் ஆற்றலுமாகும். எனவே இம் மூன்று அம்சங்களும் எந்த ஆசிரியரிடம் நிறைந்து காணப்படுகின்றதோ அவரே வாண்மைமிக்க ஆசிரியராவார். வாண்மையாளர்கள் தாம் மேற்கொள்ளும் தொழிற்துறையில் சிறப்பான ஆற்றலும்இ நிறைவான தேர்ச்சியினையும் பெற்றிருப்பது அவசியமாகும். ஒரு சாதாரன மனிதனின் இயலுமைக்கு அப்பாற்பட்டவைகளே வாண்மைத்துறையாகும். எனவே வாண்மையாளர்கள் சாதாரனமானவர்கள் அல்லாமல் நீண்டகாலப் பயிற்ச்சியோடுஇ சிறப்புத்துறையில் சேவையாற்றுவதோடுஇ ஆய்வுஅடிப்படையிலான அறிவுத் தொகுதிகளை விளங்கிக்கற்பதற்கான வாய்ப்பும்இ கற்றுக்கொண்ட அறிவை பொருத்தமான சந்தர்பங்களில் பயன்படுத்தும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.

தனியாள் ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுவதும் கற்பதும் அவ்வாறு கற்ற அறிவினை வாழ்க்கையினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தல் வேண்டும். இச்செயற்பாடடிற்கு ஆணிவேராகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள் ஆவர். சிக்கலான அப்பணியினை நிறைவு செய்வதற்கு ஆசிரியர்களிடம் வாண்மை தொடர்பான உயர்நிலைத் தேர்ச்சிகள் தேவைப்படுகின்றன. எனவே ஆசிரியர்கள் இப்பணியினைச் செய்வதற்குரிய தேர்ச்சியைப் பெறும் போது ஆசிரியர்களினால் தம்மிடம் கற்கவரும் இளம் தலைமுறையினரை உரியவாறு தயார்செய்ய முடியும். எதிர்காலத்தில் எழுகின்ற சவால்களை துணிச்சலோடு எதிர்கொள்ளவும் அவர்களின் கற்றலை இலகுள்ளதாக்குவதற்கும் அவர்களின் கற்றலுக்கு அவர்களையே பொறுப்புடையவர்களாக்கும் பணியும் ஆசிரியர்களின் வாண்மை விருத்தியிலே தங்கியுள்ளது .ஆசிரியர் மாணவர்களின் கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை விருத்தியடையச் செய்யும் முகவர்களாவர். இவர்களே மாணவர்கள் மத்தியில் நேரானதும் எதிரானதுமான மனப்பாங்குகளையும் ஏற்படுத்த முடியும். ஆசிரியர்கள் மாணவர்களிடையே கற்றல் தொடர்பான ஆர்வத்தையும் சுதந்திர உணர்வையும் உயர்சிந்தனை ஆற்றலையும் விருத்தி செய்யமுடியும். இங்கு முறைசார் கல்வியினை பிரயோகிப்பவர்கள் ஆசிரியர்களாவர். எனவே முன்குறிப்பிட்ட தேர்ச்சிகளை மாணவர்கள் மத்தியில் உருவாக்க ஆசிரியர் வாண்மையில் உரிய பங்குகொடுக்கப்பட வேண்டும்.

நல்ல ஒரு வினைத்திறன் மிக்க ஆசிரியரானவர் ஆக்கபூர்வமான சிந்தனையாளராகவுமஇ; அறிவைக் கற்றுக்கொள்பவராகவும்இ மாணவர்களை முன்னேற்றுவதற்கான புதிய பல்வேறுபட்ட கற்றல் சூழலை உருவாக்கி பல்வேறுபட்ட போதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்துபவராகவும் இருப்பதுடன் அவரால் வகுப்பறைக் கற்பித்தலில் முகாமைத்துவம் பேணுவதும் அவசியமாகின்றது. அதாவது மாணவனின் கற்றலை உச்ச அளவிற்கு விருத்திசெய்தல்இ கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் தொடர் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல்இ அதேபோன்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகளைத் தேடியறிந்து அதற்கு உடனடிப்பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன ஒரு வாண்மைகொண்ட ஆசிரியராலே மேற்கொள்ளமுடியும். வகுப்பறைக் கற்பித்தல் நடவடிக்கையில் மிக உன்னதமான பயனைப் பெறவேண்டுமெனின் பெருத்தமான கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அவற்றை கண்முன்னே நிறுத்தும் போது அவர்களால் கற்றலை ஏற்றுக்கொள்ள முடியும்.

மேலும் ஆசிரியர்கள் தாம் பெற்ற கடந்தகால அனுபவங்களை வைத்துக்கொண்டு தற்காலக் கல்வித்தேவைக்கு ஈடுகொடுக்க முடியாது. ஏனெனின் மாறிவருகின்ற நவீன உலகிற்கு தக்கவகையில் தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கும் வாண்மைமிக்க ஆசிரியர்கள் நேர்த்தியான உடைநடையும் மனவெழுச்சி உறுதிப்பாடு அதிகமுள்ளவரும்இ எப்போதும் கரிசனையுடனும் சுறுசுறுப்புடனும் செயற்படுமாற்றல்இ தமது பாடத்தினை மட்டும் கற்பிக்கப் போதுமான அறிவு இல்லாமல் பரந்த அறிவு கொண்டவர்இ சுய ஒழுக்கக்கட்டுப்பாடும் மாணவரது ஒழுக்கத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டுபவரும்இ கற்றல் கற்பித்தல் செயன்முறையில் தரமேம்பாட்டிற்காக புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்துபவர்இ ஆக்கத்திறன் மிக்கவரும் தமது பணியினை கடமை தவறாமல் செய்பவரும்இ சாதாரனமானவர்கள் போல் அல்லாமல் பரந்த நோக்குடையவர்இ மாணவர் மையக்கற்றல் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரையும் குறைந்தபட்ச அடைவுக்கேனும் இட்டுச் செல்ல முற்படுபவர். போன்ற பண்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் வகுப்பறையில் வாண்மை மூலம் பெற்றுக்கொண்ட விடயங்களை நல்ல முறையில் பிரயோகிப்பதால் மாணவர்கள் முக்கிய திறன்களையும் மனப்பாங்குகளையும் கற்றுக் கொள்கின்றார்கள். ஆசிரியர்கள் தமது நுண்முறைக் கற்பித்தல் பிரயோகத்தை உரியவாறு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றார்கள். தம்மிடம் கற்கும் மாணவர்களின் கற்கைக்கு வகைகூறும் பொறுப்பினை ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். தொழிநுட்பம் என்பது இன்றைய கற்றல் கற்பித்தல் செயன்முறையில் பிரிக்க முடியாத பங்கைவகிக்கின்றது. ஆசிரியர்கள் கல்வி தொடர்பான தொழிநுட்பத்தைப் பயன்படுத்தாத போது கற்றல் கற்பித்தல் செயன்முறை முழுமை பெறுவதில்லை. மாறும் உலகில் உருவாகும் வகுப்பறைக் கற்றலுக்குப் பொருத்தமான தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் வாண்மைமிக்க ஆசிரியரிடம் இருத்தல் இன்றியமையாத முன் தேவையாகும். ஆசிரியர்கள் வகுப்பறையில் முழு நேரமும் ஆசனத்தில் இருந்து கற்பித்தல் கூடாது. வகுப்பறையில் பல இடங்களிலும் நின்று ஓழுங்கையும் நிலை நாட்டிக் கற்பிக்கவேண்டும். அத்துடன் ஓரே இடத்தில் இருந்து ஒரேதொனியில் கதைப்பாரானால் மாணவர்களுக்கும் சலித்துப்போய் விடும். எனவே வாண்மைகொண்ட சிறந்த ஆசிரியர் இவ்வாறான பண்புகளைத் தவிர்த்து தனதுகற்பித்தல் செயலில் ஈடுபடவேண்டும்.

முதல்நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போது புதிய கற்றல் செயன்முறைகளை வகுப்பறையில் அறிமுகப்படுத்தும் போது முன்நிகழ்வுகள் பற்றி ஆசிரியர்கள் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும். பாடசாலையில் காணப்படும் வேலைப்பழு காரணமாக ஆசிரியர்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை. வகுப்பறையில் உள்ள ஒளியின் அளவுஇ காற்றோட்டவசதிஇ இடவசதி போன்ற அம்சங்கள் மாணவர்களின் கற்றல் நடத்தையினைப் பாதிக்கின்றன. அவ்வாறான பௌதீகக்கட்டமைப்புக்கள் ஆசிரியரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையே .ஆயினும் ஒரு வாண்மைமிக்க ஆசிரியர் கிடைக்கத்தக்க வளங்களில் இருந்து உச்சபயனைப் பெறுவதற்குஏற்ற ஒழுங்குமுறை செய்து கற்பித்தலில் ஈடுபடுவது அவரது பொறுப்பாகும். வாண்மைமிக்க ஆசிரியர் ஒருவரின் வகுப்பறையானது மிகவும் சந்தோசமானதாகவும்இ ஆரோக்கியமானதாகவும்இ மனஅமைதி நிறைந்த இடமாகவும் காணப்படவேண்டும். காரணம் குடும்பச் சூழலைவிட்டு பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் கிடைக்கின்ற சந்தோசம் அமைதி போன்ற அனைத்துத் தேவைகளும் பூரணமான முறையில் பூர்த்திசெய்யப்பட வேண்டும். இம் மாணவர்களில் ஆசிரியர்கள் மிகவும் கரிசனைகாட்டி தனது கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

வாண்மைமிக்க ஆசிரியர் ஒருவருக்குக் கற்றல் என்பது அவசியமாகின்றது. அவர் தன் தொழிலில் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். ஏனெனில் கற்றலில் தேங்கிநிற்றல் மகிழ்வற்றதன்மையையும் எரிச்சலையும் விளைவிக்கும். மேலும் ஒரே பாடங்களையும் பயிற்ச்சிகளையும் திரும்பத்திரும்ப உரைத்து வருவதால் மாணவர்களுக்கும் சோர்வு ஏற்படும். ஆசிரியர் கற்று தன் அறிவைப் பெருக்கிக்கொள்வதால் தான் கற்றவற்றை தன் கற்பித்தல் நடவடிக்கையில் பிரயோகிக்கும் போது மாணவர்களும் அதனை ஆர்வத்துடன் கற்று இலகுவாக உள்வாங்கிக்கொள்வர்.

ஆசிரியர் ஒருவரின் கற்பித்தல் நுட்பங்களை உணர்ந்து மாணவர்கள் அவரின் வகுப்பறைக்கு மிகவும் ஆர்வத்துடன் சமூகமளித்தல் அவரின் கற்பித்தலுக்குக் கிடைக்கும் பாரிய வெற்றியாகும். சுpல  ஆசிரியர்களைமாணவர்கள் விரும்புவார்கள் சிலரை வெறுப்பார்கள் இந்த ஆற்றலானது ஒவ்வொரு ஆசிரியரினதும் கற்பித்தல் திறமையில் தங்கியுள்ளது. கற்பித்தல் ஆர்வத்தைத் தூண்டும் சிறந்த கருவியாக நகைச்சுவை உணர்வுடன் கற்பிப்பது விளங்குகின்றது. ஒரு ஆசிரியர் கோபமான முகத்துடனும் கடினமான குரலுடனும் பாடமொன்றினைக் கற்பிக்கும் போது மாணவர்களிடம் அது வரவேற்பளிக்காது அவர்களைச் சென்றுசேராது. அது தவிர ஒரு ஆசிரியர் கலகலப்பான முகத்துடனும் புன்னகையுடனும் நகைச்சுவை உணர்வுகொண்ட பாணியுடனும் கற்பிக்கும் போது அந்த ஆசிரியரின் பாடத்திற்கு அதிகவரவேற்புக் காணப்படுவதுடன் மாணவர்களையும் சென்றுசேரும். எந்தவொரு விடயத்தையும் கற்பிக்கின்றபோது வாண்மை உணர்வுடன் அதனை விளக்கமுற்படுகின்ற வேளை அவ்விடையம் மாணவர்களை இலகுவில் சென்றடையும். நகைச்சுவை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதனையே வாண்மைமிக்க ஆசிரியர் தனது கற்பித்தலில் ஊடகமாகப் பயன்படுத்துகின்ற வேளை தாம் கற்பிக்கும் விடயம் மாணவர்களிடம் மிக இலகுவில் சென்றடையும்.

மாணவர்கள் பாடங்களைத் திறமையுடன் கற்பதற்கு அவர்கள் கற்றலில் ஊக்கம் பெறவேண்டியது முக்கியமென ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் கற்றலை ஊக்கத்துடன் செய்வார்களாக இருந்தால் அக்கற்றல் வெற்றியளிக்கும். ஆகவே ஆசிரியர் பாடத்தினைக் கற்பிக்கும் முன்னர் மாணவர்களை கூடியளவு ஊக்கத்துடன் தொழிலாற்றக் கூடியளவு தனது கற்பித்தலில் பல உத்திகளைக் கையாள வேண்டும். இவ்வாறு செய்வதனால் மாணவர்களின் அடைவுமட்டங்களும் அதிகரிக்கக் கூடியதாகவும் காணப்படும். இத்தகைய செயற்பாடுகளேடு வாண்மை கொண்ட ஆசிரியர்கள் தனது கற்பித்தலில் ஈடுபட வேண்டும். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களை அறிந்துகொள்வது அவசியமானதாகும். மாணவர்களின் தரத்தினை அறிந்திருந்தால் மாத்திரமே அவர்களுக்கு ஏற்றவாறு கற்பிக்க முடியும். உடல்இ உளஇ மனவெழுச்சி வளர்ச்சிகளில் மாணவர்களிடம் தனி வேறுபாடு உண்டு என்பதை ஆசிரியர் மனதில் வைத்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு மாணவர்களையும் தனித்தனியே கவனிப்பது சிரமமானதாக இருந்தால் ஆசிரியர் அதற்கு வேறு உத்திகளைக் கையாள வேண்டும். அத்துடன் ஆசிரியர் தாம் கற்பிக்கும் விடயங்களில் அதிகளவு கவனஞ் செலுத்த வேண்டும். ஆசிரியர் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் தான் கற்பிக்கும் விடயத்தை கவனமெடுத்து ஆயத்தஞ் செய்யாவிடில் அவர் வெற்றியுடன் கற்பிக்க முடியாது. தாம் உருவாக்கும் பாட வடிவம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். எதிர்காலத்தில் திறமை வாய்ந்த தலைமுறைகளை உருவாக்கும் பெரும் பணி ஆசிரியர்களின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பணியில் ஆசிரியர்கள் வாண்மையுடன் செயற்படுவார்களானால் அனைவரும் எதிர்பார்க்கும் இலக்கினை அடையலாம்.
பிரசாந்தினி. தட்சிதானந்தன்
2ம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்