கிராம சேவை உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் உடல் மீள் பிரேத பரிசோதனை

0
682
மர்மமான முறையில் மரணமடைந்த கிராம சேவை உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் உடலை  மீள் பிரேத பரிசோதனை நடாத்துவதற்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் கிராமசேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 2016.04.05 ஆம் திகதி அன்று எருவிலில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  இது தொடர்பான வழக்கு விசாரணை 28.09.2017 திகதி வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது கிராம சேவை உத்தியோகத்தர் சார்பாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் சந்திரமணி அவர்கள் ஆஜராகியிருந்தார். இதன் போது அவர் குறித்த மரணம் தொடர்பில் உண்மை நிலையினை கண்டறிவதற்கு மீள் பிரதேச பரிசோதனை நடாத்துவதற்கான அனுமதியினை வழங்கு மாறு நீதிமன்றிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த பிரேதத்தை தோண்டி எடுத்து மீள் பிரதேச பரிசோதனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
   இதற்கமைய எதிர்வரும் 09.10.2017 ஆம் திகதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்று கூடி பிரேதத்தினை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற் கொள்வதற்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது….