நீலாப்பொல பகுதியில் வயல்வேலைக்குச்சென்ற நான்கு விவசாயிகள் மீது தாக்குதல்

0
278

மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நீலாப்பொல பகுதியில் வயல்வேலைக்குச்சென்ற நான்கு விவசாயிகள் மீது அங்குள்ள    விவசாயிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில்  நீலாப்பொல ஒட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக விவசாய சம்மேளனம் பொலிசில் முறையிட்டுள்ளது..

இதனையடுத்து பொலிசார் ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

.  இத்தாக்குதலின்போது மூன்று விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மூதுார்  தளவைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

. குறித்த காணிக்குள் இன்று காலை தாம் வேலைசெய்வதற்காக சென்றபோது பலாத்காரம் செய்த குறித்த  பிரிவுகளைச்சார்ந்த  விவசாயிகள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான முகமட் ஜிகாத்தெரிவித்தார்.

தன்னுடன் தர்மலிங்கம் சிவகுமார்(34) 0778804027 என்ற விவசாயியும்,முகமட்றிசாத் என்ற விவசாயியும் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மூதுார் வைத்தியமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்   ஜிகாத் தெரிவித்தார்..

இதில் சிவகுமார் என்பவருக்கு பாதிப்பு அதிகம் என வும் இவர் தீவீர சிகிச்சைப்பிரிவில் இருந்து வாட்டிற்கு மாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர் தமது விவசாய சங்கத்தின் செயலாளர் எனவும் ஜிகாத்மேலும் குறிப்பிடுகையில் தெரிவித்தார்.0775157593 குறித்த காணிகள் தமது உர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்து அங்கு வந்த 13பேர் தம்மீது தாக்கியதாக காயப்பட்ட சிவகுமார் குறிப்பிட்டார். அரசாங்க அதிபரின் கடிதத்தை காண்பித்தோதும் அவர்கள் அதனையும் கவனத்தில் எடுக்கா   மல் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.