பெட்ரோல், டீசல் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு

0
387

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பதற்கு லங்கா ஐ ஓ சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எனினும், விலை அதிகரிப்பு வீதத்தை இதுவரை தீர்மானிக்கவில்லை என லங்கா ஐ ஓ சி நிறுவனத்தின் உப தலைவர் சித்தார்த் ஆக்ரவால் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் எரிபொருளின் விலை குறைவடைந்திருந்த நிலையில், தற்போதி தீர்வை வரி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பெற்றோல் மற்றும் டீசலை நட்டத்திலேயே விநியோகிப்பதாகவும், லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு மாற்றுவழிகள் இல்லையென லங்கா ஐ ஓ நிறுவனத்தின் உப தலைவர் சித்தார்த் ஆக்ரவால் தெரிவித்துள்ளார்.