கிழக்கின் ஆட்சி அதி­காரம் இன்று நள்­ளி­ர­வுடன் முடிவு – அதிகாரம் ஆளுனர் கைக்கு

0
296

கிழக்கு மாகாண சபையின் ஆட்­சிக்­காலம் இன்று சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வுக்கு வரு­கி­றது. மாகா­ணத்தின் புதிய சபை தேர்ந்­தெ­டுக்கும் வரை கிழக்கு மாகா­ணத்தின் நடை­முறை பொறுப்­புக்கள் அனைத்தும் ஆளு­நரின் அதி­கா­ரத்தின் கீழ்­கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

 

2010 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 8 ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்­கான தேர்தல் இடம்­பெற்­ற­தைத்­தொ­டர்ந்து கிழக்கு மாகாண சபை அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இரண்டு முத­ல­மைச்­சர்­க­ளைக்­கொண்டு வகுக்­கப்­பட்ட காலப்­ப­கு­தியின் அடிப்­ப­டையில் ஆட்சி அதி­கார நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­று­வந்­தன.

இந்­நி­லையில் சபைக்­கான ஆட்சி அதி­கார காலப்­ப­குதி நிறை­வுக்கு வந்­துள்­ளது. இதன்­படி இன்று சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் கிழக்கு மாகா­ணத்தின் ஆட்சி முடி­வுக்கு வரு­கின்­றது. அத்­துடன் அடுத்த தேர்தல் இடம்­பெற்று புதிய சபை­யொன்று தேர்ந்­தெ­டுக்­கப்­படும் வரையில் கிழக்கு மாகாணத்தின் நடவடிக்கைகள்  யாவும் கிழக்கு ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் கீழ் வரவுள்ளன.