தமிழரசிக்கட்சியினர் அருகதையற்றவர்கள்.

0
348

தமிழரசிக்கட்சியினர் மாவீரர் தினத்தை கொண்டாடவோ துயிலும் இல்லங்களை துப்பரவு செய்வதற்கோ அல்லது அண்ணன் தியாகதீபம் திலீபன் போன்றோரின் நினைவேந்தலை நினைவுகூருவதற்கோ அருகதையற்றவர்கள என  த.தே.மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட  அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிடுகையில் யுத்தம் முடிந்த கையுடன் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்தை ஒழித்த இந்த அரசிற்கு நன்றி எனக்கூறிய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வொன்றில் திலீபன் அவர்களின் தியாகத்திற்கு நிரந்தர தீர்வே பரிகாரம் எனக்கூறியிருப்பது மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்குரிய இராஜதந்திரமாகவே நாம் பார்க்கின்றோம். அண்மையில் கூட விடுதலைப்புலிகளை மகிந்த ராஜபக்ஸ அரசு அழித்ததனால்தான் திருமலைக்கு போய்வரக்கூடியதாக இருக்கிறது என த.தே.கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார். தியாக தீபம் அவர்கள் என்ன நோக்கத்திற்காக தன்னுயிரை மெழுகாய் உருக்கி வீரமரணமடைந்தானோ அதனை குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கின்ற தமிழரசிக்கட்சியினர் மாவீரர் தினத்தை கொண்டாடவோ துயிலும் இல்லங்களை துப்பரவு செய்வதற்கோ அல்லது அண்ணன் தியாகதீபம் திலீபன் போன்றோரின் நினைவேந்தலை நினைவுகூருவதற்கோ அருகதையற்றவர்கள்.  எந்த இலட்சியத்திற்காக தமது சந்தணமேனிகளை ஆகுதியாக்கினார்களோ அவர்களின் இலட்சியத்திற்கு வேட்டுவைத்து தமது சொந்த நலனுக்காகவும் பதவிக்காகவும்  சிலர் கூச்சலிடுகின்றனர். தமிழ் மக்களின் அசியல் அபிலாசைகளை முற்றுமுழுதாக தவிடுபொடியாக்கியுள்ள இவர்கள் தற்போது  தமிழ் மக்களிடமிருந்து ஓரம்கட்டப்பட்டுவருகின்றனா.;  கருத்துகணிப்பின்படி நிலைமையை விளங்கிக்கொண்;ட கூட்டத்தினர்  மேலும் மக்களை ஏமாற்றமுடியாது என்பதையறிந்து செய்வதறியாது தடுமாறி கருத்துகளை சிறுபிள்ளைத்தனமாக வெளியிடுவதை பத்திரிகைகள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது. அண்மையில் பட்டிருப்புத்தொகுதியிலுள்ள  பழுகாமத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழரசிக்கட்சியின் செயலாளர் கூறிய கருத்து அவருடைய அரசியல் புலமையை மட்டிடுகின்றது. இவர்தான் இதுவரை காலமும் மட்டக்களப்பு மக்களை தேசியம் பேசி ஏமாற்றியவர். தமிழ்மக்களின் அடிப்படைக்கோரிக்கைகள் எதுவுமல்லாத புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை 21.09.2017 அன்று   இந்த நாட்டினுடைய பிரதம மந்திரியால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது இதனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மக்களை ஏமாற்றும் இராஜதந்திரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி யாரையும் ஏமாற்ற முடியாது என அறிந்தமையினாலே தற்போது சிலர் கல்லுவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் . இன்றைய சூழ்நிலையில்; எமது மக்கள் குறிப்பாக விவசாயிகள் பாமரமக்கள் இளைஞர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் வைத்தியர்கள் எந்திரிகள்  ஏனைய புத்தஜீவிகள்  விழிப்படைய வேண்டும். நாம் காலம் காலமாக பேரினவாதம் நடைமுறைக்கு கொண்டு வந்த யாப்புக்களையும் திருத்தங்களையும் ஏன் நிராகரித்து வந்தோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் நிராகரிக்கப்பட்டு விட்டுக்கொடுக்காத ஒற்றையாட்சி முறையே கொண்டுவரப்பட்டமையால் அவை தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்தன. இந்த புதிய அரசியலமைப்பும்தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகள் எதையும் கொண்டிருக்கபோவதில்லை என்பது நிதர்சனம்.புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏதோ இருப்பதாக உலகிற்கு காட்டி ஐ.நாவின் 34ஃ1 உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைபடுத்துவதுபோன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றபோகின்றது. இதனால் ஏமாற்றப்படுபவர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்கN;ளயாவர்.
எனவே இந்த யாப்பு சர்வசனவாக்கெடுப்புக்கு வரும்போது தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுமென்பது திண்ணம் எனத்தெரிவித்தார்.