35 சிற்றூழியர்கள் திடீர் பதவி நீக்கம்

0
503

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று தொடக்கம் பத்து வருடங்களாக கடமையாற்றிய 35 தற்காலிக சிற்றூழியர்கள் எது வித முன் அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த திங்கட்கிழமை கடமைக்கு சமூகமளித்து வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு தங்களது பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் தங்களது பணிகளை முடித்து விட்டு மாலை வேளையில் பணி நிறைவிற்கான பதிவேட்டில் கையொப்பமிட சென்ற போது குறிப்பிட்ட சில அலுவலகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு தற்காலிக ஊழியர்கள் அனைவரும் தொழில்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

நாள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்குமென்று நம்பி வாழ்ந்து வந்த சிற்றூழியர்கள் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக விசனம் தெரிவிக்கின்றனர்.