இந்தியாவோடு எமது விடுதலைப்புலிகள் போராட வேண்டும் என நினைத்ததில்லை

0
541
உண்மையில் இந்தியாவோடு எமது விடுதலைப்புலிகள் போராட வேண்டும் என்று அவர்கள் நினைத்ததில்லை இந்தியாவோடு ஆயுதம் ஏந்திப்போராடுவதற்கு நிற்பந்தித்தது இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஏன மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரிசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளையின் ஏற்பாட்டில் தியகதீபம் திலிபனின் நினைவு தினம் பழுகாமத்தில் கிளையின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
   தியாகி திலிபனை பொறுத்த மட்டில் இரண்டு வகையில் அவர் முக்கியம் பொறுகின்றார். ஒரு ஆயுத போராளியாக இருந்தவர் ஒரு அறவழிப்போராளியாகவும் இருக்க முடியும் என்பதனை சொல்லி சென்றிருக்கின்றார். அந்த வகையில்தான் தான் அவர் இரண்டு முறைகள் ஊடாகவும் எமது விடுதலைக்காக செயற்பட்டு தனது உயிரினை தியாகம் செய்துள்ளார்.
உண்மையில் இந்தியாவோடு எமது தமிழ் மறவர்கள் விடுதலைப்புலிகள் போராட வேண்டும் என்று அவர்கள் நினைத்ததில்லை இந்தியாவோடு ஆயுதம் ஏந்திப்போராடுவதற்கு நிற்பந்தித்தது இந்தியாவாகத்தான் இருக்க முடியும். இந்தியாவை அகிம்சை வழியில் சந்திக்க வேண்டும் அறவழிப்போராட்டமான அந்த காந்தி காட்டியவழியில் நாங்கள் இந்தியாவை இறங்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த சத்தியா கிரக்ப்போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார் ஆனால் இந்தியா இறங்கிவரவில்லை இதனால் அவர் உயிரை தியாகம் செய்தார்.
 இன்றைய நிலையில் நாங்கள் பாரக்கின்ற போது இந்த போராட்டமானது மௌனிக்க பட்டிருக்கின்றது. ஆனால் போராட்டத்தின் பாதை என்பது இன்னும் மௌனிக்கமாமல் உரத்த சிந்தனையோடு இன்னும் இருந்து கொண்டு இருக்கின்றது அந்த வகையில் பார்க்கின்றபோது. இன்றைய அரசியல் நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து நோக்க வேண்டும் இன்றை அரசியல் நிலைப்பாட்டில் பழுத்த அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் கொழுத்த இனவாதிகள் மத்தியில் தனது சாணக்கியத்தால் பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருகின்றார்.
இந்த இடத்தில் உங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் பல்வேறு பட்ட அனுபவங்களை நாங்கள் கடந்திருக்கின்றோம். அநடத வகையில் அறவழிப்போரட்டத்தினை தந்தை செல்;வா அசர்கள் அறவழிப்போராட்டத்தினை நடாத்திய பொழுது அது அங்கிகாராமின்றி செயலிழந்து போனது. எமது ஆயுத போராட்டம் கூட சர்வதேசத்தில் அங்கிகாரம் பெறாமல் போய்விட்டது. இதனை எல்லாம் கண்டறிந்த எமது தலைவர் சம்பந்தன் அவர்கள் சாத்தியமான வழிகளைக் கண்டறிந்து ஒரு இராஜதந்திர முறையிலான போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
தமிழர்களுக்கு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்கின்ற அதேவேளை நியாயமாக சிந்திக்கின்ற சிங்களவர் மத்தியில் தான் ஒரு விடாக்கண்டனாக இருந்துவிடாது என்பதனையும் அவர் சிந்திக்கின்றார். அதேவேளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் தான் ஒரு நியாயத்தை எடுத்துரைக்கின்ற ஒரு தலைவர் என்ற நிலைப்பாட்டையும் உருவாக்கிவருகின்றார். இதனிடைய சிங்கள மக்கள் மத்தியல் கொடாக்கணடர்களாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பட்டில் சிலர் இருக்கின்றனர்கள் அதே போன்று எமது மத்தியில் விடாக்கண்டராக இருக்கவேண்டும் என நினைப்பவர்களும் இருக்கின்றனர். இதனைடையே இரண்டும் நடக்க கூடாது நிரந்தர தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் சில அரசியல்வாதிகள் இருக்கின்றர்கள் அந்த வகையில் றிசாட்பதூரதீனும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்.
   அவர்கள் நினைப்பதெல்லாம் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்த தீர்வு கிடைந்துவிட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் செய்தால் தாங்கள் ஒன்றையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் அதனை சிந்திக்கின்றனர். அவர்கள் நினைப்பதெல்லாம் தமிழத்தோசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் சண்டைபிடித்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பதனையே அவர்கள் சிந்திக்கின்றனர்.
   நாங்கள் நியாயங்கள் தேவை என்று சிந்திக்கின்றோம் ஆனால் சிலர் லாபங்கள் தேவை என சிந்திக்கின்றனர். நியாங்களா? லாபங்களா? இதில் எதனை நீங்கள் முதன்மை படுத்துவீர்கள் என்பதனை சிந்தித்துபாருங்கள். எப்பொழுதும் தமிழ் தலைமைகள் நியாத்தின் பக்கம்தான் நிற்கும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்;. எனவே இவ்வாறான வேறுபட்ட சிந்தனையாளர்கள் மத்தியில்தான் சம்பந்தான் ஐயா அவர்கள் தனது நடவடிக்கைகளை முன்னெத்து வருகின்றார் என அவர் இதன் போது தெரிவித்தார்
பழுகாமம் நிருபர்