மட்டு.அரசாங்க அதிபர் சுங்க திணைக்கள பணிப்பாளராக நியமனம்

0
1284

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயலாளர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுங்கத்திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளராக கடமையாற்றும் சூலாநந்த பெரேரா அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சிரேஸ்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்தே குறித்த பதவி வெற்றிடத்துக்கு திருமதி.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.