வெளி மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பதிவு செய்யவும்.

0
307
Teaching calling on student in classroom

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த, ஏனைய மாகாணங்களில் அண்மையில் ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் தங்களது பதிவுகளை வெளிமாகாண கிழக்கு ஆசிரியர்களின் சங்கத்தில் பதிவு செய்யுமாறு அதன் தலைவர் எஸ்.கோபிநாத் இன்று(26) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தென், வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியர் சேவையாற்றிக் கொண்டிருப்பவர்களும், இதுவரை வெளிமாகாண கிழக்கு ஆசிரியர்களின் சங்கத்தில் பதிவு செய்யாத, கிழக்கு மாகாணத்தினை வசிப்பிடமாக கொண்டவர்கள் தங்களது சுயவிபரங்களினை பதிவு செய்யுமாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0772827611 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறும் அதன் தலைவர் மேலும் கூறினார்.