விதை நெல் மூடைகள் எரிப்பு ; வவுணதீவில் சம்பவம்

0
238

(லியோன்) மட்டக்களப்பு பருத்திச்சேனை பகுதி விசாயி ஒருவரின்  விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் மூடைகளை இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு  நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

 

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பருத்திச்சேனை கிராம சேவை பிரிவை சேர்ந்த சுப்பிரமணியம் யுவராஜா என்ற விவசாயின் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த சுமார்  1,60,000  ஆயிரம் ரூபா பெறுமதியான 39  விதை நெல் மூடைகள்  (23) சனிக்கிழமை  இரவு இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த நெல் களஞ்சியசாலையின் பின்புறமாக உள்ள கம்பி வேலியினை வெட்டி உள்நுழைந்தவர்கள் சைக்கிள் டியுப் மூலம் பெற்றோலை களஞ்சிய சாலைக்குள்  ஊற்றி நெல் மூடைகளுக்கு தீயிட்டுள்ளதாக விவசாயி தெரிவித்தார் .

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்