52 ஆபத்தான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்த முடியாது.

0
397

(படுவான் பாலகன்) சிறுவர்கள்  தொடர்பில் 16சட்டங்கள் இலங்கையிலே இருக்கின்றன. அவ்வாறான சட்டங்கள் சிறுவர்களின் வயதினை தமக்கேற்ற வகையில் அமைத்திருக்கின்றன. அதேவேளை சிறுவர்கள் செய்ய முடியாத 52ஆபத்தான தொழில்கள் தொடர்பிலும் குறிப்பிட்டிருக்கின்றன. அவ்வாறான தொழிலுக்கு ஈடுபடுத்தினால் அதற்கான தண்டணைகளும் வழங்கப்படுகின்றன. என உதவித் தொழில் திணைக்கள ஆணையாளர் ஆ.கோகுலரஞ்சன் தெரிவித்தார்.

சிறுவர் மட்டத்தில், சிறுவர் பாதுகாப்பு நிகழ்வுகளை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்வு இன்று(25) திங்கட்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்றது. இதன்போதே இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுசரணையில், பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், வ.குகராஜ் ஒழுங்கமைப்பில், பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில், நடைபெற்ற நிகழ்வில், சமூகசேவை உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சிறுவர்களை எவ்வாறான தொழில்களில் ஈடுபடுத்த முடியும். ஈடுபடுத்த முடியாத தொழில்களில் ஈடுபடுத்தினால் வழங்கப்படும் தண்டணைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.