இலங்கை சட்ட கல்லூரி தெரிவுக்கான போட்டிப் பரீட்சை

0
239
A few blank sheets ready for been filled in a exam.

இலங்கை சட்­டக்­கல்­லூ­ரியின் 2018 ஆம் ஆண்­டிற்கு புதிய மாண­வர்களை உள்­வாங்­கு­வ­தற்­கான போட்­டிப்­பரீ ட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறும் என இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் பரீட்­சைகள் திணை க்­களம் வெளியிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளது. அவ்­வ­றிக்கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கை சட்­டக்­கல்­லூ­ரிக்கு 2018 ஆம் ஆண்­டுக்கு புதிய மாண­வர்­களை உள்­வாங்­கு­வ­தற்­கான போட்­டிப்­ப­ரீட்­சை­யா­னது அடுத்த மாதம் 30 ஆம் திகதி நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ ளது.

குறித்த பரீட்­சைக்­காக இந்த வரு­டத்தில் மாத்­திரம் நாட­ளா­விய ரீதியில் 5 ஆயி­ரத்து 631 விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்த நிலையில் 37 பரீட்சை மத்­திய நிலை­யங்­களில் குறித்த பரீட்­சை­யா­னது இடம்­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை இப்­ப­ரீட்­சைக்கு தோற் றும் பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான அனு­மதி அட்­டைகள் ஏற்­க­னவே கடந்த 15 ஆம் திகதி அனு­ப்பிவை­க்கப்­பட்­டுள்­ள­தா­கவும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள அனு­ம­தி­யட்­டைகள் கிடைக்­காத பரீட்­சார்த்­திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கு அது குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.