கலைத்துறைனருக்கு வரி விலக்கு

0
289
புதிய வரிச் சட்டத்தின் கீழ் இலக்கியம், இசை, மேடை நாடகம் மற்றும் சினிமா உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபட்டுள்ளோர் தமது தயாரிப்புகள மூலம் வருடாந்தம் 5 இலட்சம் ரூபா வரை வரியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தமது தயாரிப்பிற்காக தயாரிப்பாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பளம் அல்லது ஏனைய கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக, கதை எழுதுவோருக்காக வழங்கப்படும் தொகைக்குப் பின்னரான 5 இலட்சம் ரூபா வரையிலான தொகை மொத்த வருமானமாக கருதப்படுவதுடன், இத்தொகை வரிகளில் இருந்து விடுவிக்கப்படும்.
இதற்கமைவாக, கலைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதுவரையில் விசேடமாக வழங்கப்பட்டிருந்த வரி நிவாரணம் மற்றும் ஓய்வுக்கான செலவுக்கு வழங்கப்படும் வரியை செலுத்தக்கூடிய அனைத்துப் பிரஜைகளின் வருமானம் வரியை அறவிடக்கூடிய முறையில் கலைஞர்களுக்கும் வரி அறவிடப்படும். ஒரு நபர் நிறுவனம் அல்லது வருமானம் பெறும் நபர் வருடாந்த வருமானத்தில் 5 இலட்சம் ரூபா வரையான தொகைக்கு வரி நிவாரணம் வழங்கப்படும்.
 வருமானத்தில் 4 இலட்சம் ரூபாவுக்கு 6 சதவீதமும் அதற்கு அடுத்தாற்போல 6 இலட்சம் ரூபா வரையான தொகைக்கு 8 சதவீதமும் வரி அறவிடப்படும். இவ்வாறு 6 இலட்சம் ரூபா வீதம் அதிகரிக்கும் அனைத்து வருமானத்திற்கும் செலுத்த வேண்டிய வரி 4 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும். இந்த வருமான வரி முறை தமது வர்த்தக அடிப்படையில் பெறப்படும் தனிநபர் நிறுவன மற்றும் வருமானம் பெறும் ஏனைய அனைத்து நபர்களுக்கும் ஒரே மாதிரியாகவம் பொதுவான முறையிலும் அமைந்திருக்கும்.
புதிய வரிமுறை 2018ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் நிதியமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.