இளம் காதலர்கள் 304 பேர் கைது

0
188

அநுராதபுரத்தில் பொலிஸாரால் இன்று (24) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இளம் காதலர்கள் 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நகரத்தில் அமைந்துள்ள ரிவர் பார்க், நேச்சர் பார்க் ஆகிய இடங்களில் உல்லாசமாக இருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அநுராதபுரத்துக்கு பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாக, பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு இந்த இடங்களுக்குச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இளம் காதலர்கள் அனைவரையும் இரண்டு பஸ்களில் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் 45 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.