அதிக விலையில் தேங்­காயை விற்­பனை செய்தால் தண்­டனை

0
360

தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா­வாக இருக்க வேண்டும். அதை­விட அதிக விலைக்கு தேங்காய் விற்­பனை செய்­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என தெங்கு உற்­பத்திச் சபையின் தலைவர் கபில யகன்­த­வெல தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தேங்காய் ஒன்றை நுகர்­வோ­ரிடம் சேர்க்கும் வரை­யி­லான முழுச்­செ­ல­வு­க­ளையும் கருத்தில் கொள்­கின்ற போது தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை­யினை எழு­பத்­தைந்து ரூபா­வாக வரை­ய­றுத்­துக்­கொள்ள முடியும்.

மேலும் கடந்த வாரம் தேங்காய் ஏலத்தில் தேங்காய் ஒன்றின் விலை 49 ரூபா­வாக இருந்­தது. எனவே மொத்த விற்­ப­னை­யா­ளர்கள் தேங்காய் ஒன்­றுக்கு பத்து ரூபாவும் சில்­லறை விற்­ப­னை­யா­ளர்கள் பத்து ரூபாவும் நிர்­ண­யிப்­ப­துடன் இன்னும் ஐந்து ரூபாவை மேல­தி­க­மாக சேர்த்­தாலும் தேங்காய் ஒன்றை அதி­க­பட்ச சில்­லறை விலை­யாக எழு­பத்­தைந்து ரூபா­விற்கு விற்­பனை செய்ய முடியும்.

அத்­துடன் தேங்காய் ஒன்று நூற்றுப் பத்து ரூபா­வு­க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் தவ­றான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. அதா­வது தொழில்­து­றையில் ஈடு­ப­டு­ப­வர்கள் தேங்காய் கொள்­வ­னவு செய்யும் போது அதனை கிலோ கிராம் அள­வி­லேயே பெறு­கின்­றனர். ஆகவே கிலோ ஒன்றின் விலைதான் நூற்­றுப்­பத்து ரூபா வரையில் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றதே தவிர சாதா­ரண மக்கள் கொள்­வ­னவு செய்யும் தேங்­காயின் விலை அது­வல்ல.

மேலும் தேங்காய் ஒன்றை 75 ரூபாவையும் விட அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர் என்றார்.