மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க 52வது மாநாடும் புதிய நிருவாக சபை தெரிவும்.

0
947

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க 52வது மாநாடும் புதிய நிருவாக சபை தெரிவும் நேற்று (23) சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற் சமுக மண்டபத்தில் தலைவர் திரு எஸ்.ஞானசிறி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் கிராம உத்தியோகத்தர்களின் நலன்புரி சார் விடயங்கள் பற்றி கருத்துரைக்கப்பட்டதுடன் கிராம உத்தியோகத்தர் பதிவியின் நீண்ட கால வரலாறு, தற்போதைய நிலையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கருத்துக்கள் கூறப்பட்டது. இதன்போது மாவட்டத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச்சென்ற கிராம உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மாநாட்டில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் சிறப்பு அதிதிகளாள இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க தலைவர் திரு.டபிள்யு.எம்.பீ.வீ வன்னிநாயக்க, செயலாளர் திரு. டபிள்யு.ஜி.கமல் கீத்சிறி ஆகியோர்களும் வெல்லாவெளி உதவி பிரதே செயலாளர் திரு.எஸ்.புவனேந்திரன் அவர்களும் மாவட்ட உதவி செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபெற்ற புதிய நிருவாக சபை தெரிவில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க தலைவராக திரு.எம்.கோமளேஸ்வரன், செயலாளராக திரு.சி.ஜீவிதன், பொருளாளராக திரு.தி.தியாகதீஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.