முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது

0
182

முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு  1 1 ம் கட்டை பகுதியில்  அலியன் எனப்படும் தனி யானை ஒன்று கிணற்றினுள் தவறுதலாக விழுந்துள்ளது  

குறித்த அலியன் யானை நேற்றைய தினம் இரவு வேளையில் அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என தெரிவித்த மக்கள், குறித்த கிணறு மேற் கட்டுக்கள் இன்றிக் காணப்படுவதே யானை இவ்வாறு விழுந்தமைக்கான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யானை களிக்காடு ,கோடாலிக்கல்லு, குஞ்சுக்கோடாலிக்கல்லு, பகுதிகளில் சுற்றித்திரிந்ததாகவும் மக்களிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது, குறித்த யானையை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  மீட்டுள்ளனர் .