பட்டிப்பளைப் பிரதேசத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை.

0
659

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2017/2018 பெரும்போகத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக் கூட்டம் இன்று(22) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற போதே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, விவசாய வேலை ஆரம்பம் 23.09.2017திகதி, விதைப்பு ஆரம்பம் 15.10.2017திகதி எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கால்நடைகளை 01.10.2017ம் திகதிக்கு முன்பாக கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வெட்டிபோட்டசேனை, கறுவாச்சோலை, புளுகுணாவை, மணல் ஏத்தம், காத்தமல்லியார்சேனை, பெருவெட்டை போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லுமாறும் கூறப்பட்டது.
பயிர்களுக்கான காப்புறுதி, விவசாய திணைக்களங்களினால் வழங்கப்படும் உதவிகள், விவசாயிகளுக்கான வங்கிக் கடன் போன்றனபற்றிய விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட உதவிசெயலாளர் ஆ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் மற்றும் விவசாய திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.