மல்லாவி-வடக்கு பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பு.

0
315

சண்முகம் தவசீலன்

மல்லாவி-வடக்கு பகுதியில் கடந்த 14.09.2017 அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.
மல்லாவி-வடக்கு பகுதியில் உள்ள மங்கைகுடியிருப்பில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் வீதிகளை திருத்தம் செய்தல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான கூட்டுக்கைத்தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் குறைகளும் கலந்துகொண்ட மக்களால் முன்வைக்கப்பட்டன.
மக்களின் நடுவே ரவிகரன் அவர்கள் உரையாற்றுகையில்,
மக்களின் குறைகளை அறியும் பொருட்டு ஒவ்வொரு ஊரிலும் குறைகேள் சந்திப்புகளை நடாத்திவருகிறேன். அந்தவகையில் இன்றைய நாள் உங்களின் ஊருக்கு வருகைதந்து ஊர்சார்ந்த குறைகளை அறியமுடிந்துள்ளது. உங்களால் முன்வைக்கப்படும் குறைகள் அனைத்தையும் தீர்க்கமுடியாவிட்டாலும் பகுதியளவிலான குறைகளை என்றாலும் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனத்தெரிவித்தார்.