காக்காச்சிவட்டை பாடசாலையில் உயர்தர வகுப்பு ஆரம்பித்து வைப்பு

0
282

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்னு மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு நேற்று(18) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1956ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில், 1996ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், திங்கட்கிழமை உயர்தர வகுப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியடையும்  மாணவர்கள் பலர், உயர்தரம் கற்பதற்கு தூர இடம்செல்ல வேண்டியதாலும், தங்களது பெற்றோரின் வருமானம் போதாதமையினாலும், கல்வியை இடையில் நிறுத்துவதுண்டு. குறித்த விடயத்தினை தமது கவனத்திற்கு கொண்டுவந்ததற்கமைய இப்பாடசாலையில் உயர்தரம் ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும், அம் முயற்சியின் காரணமாக உயர்தரவகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்.

 


இப்பாடசாலையில் கல்விப்பொதுத்தராதரப் பரீட்சைக்கு 2016 ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களுள் 17மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்;றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.