தென்னிந்திய கலைஞர்களினால் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் பறை இசை பயிற்சி

0
514

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச நாடக ஆற்றுகை குழுவிற்கான பறை இசை பயிற்சிநெறி இன்று(18) திங்கட்கிழமை முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நடைபெற்றது.
இயற்கை, பறை மற்றும் குரு ஆகியோருக்கு வணக்கம் செலுத்தப்பட்டு பறையின் இசைகள் இசைப்பது தொடர்பிலான பயிற்சி ஆற்றுகை குழுவினருக்கு இதன்போது வழங்கப்பட்டது. மேலும் பறை இசையுடன் கூடிய ஆட்டக்கோலங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டன.
தென்னிந்தியாவினைச் சேர்ந்த மணிமாறனின் புத்தர் கலைக்குழுவினரால் இப்பயிற்சி வழங்கப்பட்டது. குறித்த கலைக்குழுவினர் தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பறை இசைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பயிற்சி நெறியில், இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். இப்பகுதியில் முதன்முறையாக இப்பயிற்சி அளிக்கப்பட்டமையும் எடுத்துக்காட்டத்தக்கதாகும்.