இளைஞர்களின் எழுச்சியே சிறுபான்மை சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு காரணமாய் அமையும்

0
258

இளைஞர்களின் எழுச்சியே சிறுபான்மை சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு காரணமாய் அமையும். மலையக மக்கள்முன்னணி இளைஞர் மாநாடு நிகழ்வில் பா.உ  சா.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

 

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு  (16.09.2017) அன்று கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சாரமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு  மலையக மக்கள் முன்னணின் தலைவரும் கல்வி இராஜங்க அமைச்சருமானகௌரவ பொன் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியகூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன்¸ கிராமிய பொருளாதாரஅபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி,  பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான  அனுரகுமார திசாநாயக்க, மலேசிய  நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் மணிவன்னண் கோவின், மத்திய மாகாண சபை  உறுப்பினர் ஆர். ராஜாராம், மலையக மக்கள்  முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான அமரர்சந்திரசேகரன் அவர்களுடைய புதல்வி அனுஷா சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் கட்சிஉறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

மேலும் இந்நிகழ்வில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் எமது முன்னையதலைமைகளின் செயற்பாடு மலையகம் மற்றும் வடகிழக்கு சிறுபான்மை மக்களின் தமிழ் தேசிய கோரிக்கை சர்வதேசசமூகத்திக்கும் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் சரியான முறையில் கொண்டு செல்லப்படவில்லை. கடந்தகாலத்தில் எம்மை ஆளுமை செய்த அரசியல் தலைமைகளும் இதற்கு ஒரு காரணம். குறிப்பாக இந்நாடுகாலனித்துவத்திலே இருந்து விடுதலை அடைந்த   பின்பு அகிம்சை ரீதியாக பின்பு ஆயுத ரீதியாக போராடி தற்போதுஜனநாயக மயப்படுத்தப்பட்ட அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னேடுக்கின்றோம். போராட்டக்களின் வடிவம்மாறினாலும் நாங்கள் அடைய முனைவது எங்களுடைய உரிமையையே. துணிச்சல் மிக்க நம்பிக்கைக்குரிய இளைஞர்கள் இருந்தால் நிச்சயமாக எமது சமூகத்தினுடைய வரலாறு நாளை மாற்றி அமைக்கப்படும். உலகில்மலையக சமூகத்தை மற்றய சமூகத்திற்கு சமமாக வளர்த்தெடுக்க வேண்டிய மிக பாரிய பொறுப்பிலே இருக்கின்றோம். எங்களுக்கான உரிமைகள் கிடைக்கும் வரை நாம் போராடிக்கொன்றே இருக்க வேண்டும். எமது நம்பிக்கையுடனானகல்வியே எமது வெற்றிக்கு வழி அமைக்கும். நீங்கள்  ஒவ்வொருவரும்  மாற்றத்தின் மறுமலர்சியாளர்களாக மாறவேண்டும். தற்போது வடக்கு,  கிழக்கு, மலையகம்  போதையில் அழிந்து கொண்டிருக்கும் மாகாணங்களாககாணப்படுகின்றது இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாம் துணிச்சலாக, ஆரோக்கியமாக  எமது சமூகத்திற்குதலைமை தாங்க கூடிய இளைஞர்களாக மாறவேண்டும் என பேசினார்.