போராட்டங்களிற்கு தலைமை ஏற்க முடியாது வெட்கி தலைகுனிகின்றோம்.சிவசக்தி ஆனந்தன்

0
288

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் செயற்பாட்டிலிருந்து மீளவேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இலட்சியத்திற்காகவே உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள சிவசக்தி ஆனந்தன், கட்சியை அல்லது தனிநபர்களை வளப்படுத்துவதற்காக உருவாக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள்போராட்டங்களுக்கு கூட ஒற்றுமையாக தலைமைத்துவத்தை கொடுக்க முடியாது, தாம் வெட்கி தலைகுனிந்து நிற்பதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் வாக்குகளை பெற்று இராஜதந்திரமாக மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்