தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில்

0
142

தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் திலீபனின் திருவருவப்படத்திற்கான பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் துணைவி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஏற்றிவைக்க  மலர் மாலையினை மாவீரரின் பெற்றோர்அணிவித்தார். தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள். கைவேலி முறுகண்டிப்பிள்ளையார் அறநெறி பாடசாலைமாணவர்களின் கலலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்று நிகழ்வில் நினைவுரையினை புதுக்குடியிருப்பு வணிகர் சங்கதலைவர் செல்வச்சந்திரன் ஆற்ற சிறப்புரையினை ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இளஞ்கதிர் நிகழ்த்தியுள்ளார்.