எதற்காகதான் நாமும் போராடுவது?

0
310

விவசாயம் மற்றும் மீன்பிடியை நம்பி வாழும் மக்களின் வளங்களை இராணுவத்தினர் கையகப்படுதியுள்ள நிலையில் பொருளாதார வசதிகளின்றி வாழும் தாம் சொந்த நிலத்திற்காக போராடுவதா? அல்லது நாளாந்த வாழக்கையை கொண்டு நடத்துவதற்காக போராடுவதா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேப்பாபுலவு பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆறு மாதத்திற்கு மேலாக  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

எனினும் தமது போராட்டத்தை பல கஷ்ரங்களுக்கு மத்தியிலே தாம் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், காணாமல்ஆக்கப்பட்ட தம் பிள்ளையை தேடுவதா? அல்லது சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதா? என கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒன்பது வருடங்களாக காணிகளை இழந்து அவற்றை மீட்கும் போராட்டத்தை தாம் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை காணிகள் விடுவிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை.