துறைநீலாவணை கிராமத்திற்கு பிறப்பு,இறப்பு,விவாகப்பதிவாளர் நியமிப்பு.

0
685
க.விஜயரெத்தினம்)
துறைநீலாவணை கிராமத்திற்கான பிறப்பு,இறப்பு பதிவாளராகவும்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கான விவாகப்பதிவாளராகவும் துறைநீலாவணையைச் சேர்ந்த தினகரப்பிள்ளை-புகழேந்தி நியமனம் செய்யப்பட்டார்.இந்த நியமனம் கடந்த வியாழக்கிழமை (14.9.2017) கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்   தி.புகழேந்திக்கு வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் நீல் த அல்விஸ் கலந்துகொண்டார்..

துறைநீலாவணை கிராமத்திற்கு சுமார் 5 வருடகாலமாக (2012 ஆண்டு முதல்) பிறப்பு,இறப்பு,விவாகப் பதிவாளர் நியமிக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறு நியமிக்கப்பட்ட திரு.தினகரப்பிள்ளை-புகழேந்தி அவர்கள் துறைநீலாவணையில் பல சமூக நிறுவனங்களிலிலும்,ஆலயங்களிலிலும் இருந்து காத்திரமான சமூகசேவை செய்தவர் ஆவார்.இவர் அமரத்துவம் அடைந்தவர்களான கொத்தணி அதிபர் தினகரப்பிள்ளை மற்றும் சோதிமணி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராவர்