சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

0
295
(திலக்ஸ் ரெட்ணம்)
மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் 59வது பொதுக்கூட்டம் 17.09.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இடம்பெறும் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்து பாடசாலை சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி மு.வு.சுந்தரேசன் தலைமையில் இடம் பெறவுள்ளது. இவ் பொது கூட்டத்தில் 2016ஃ2017 ம் ஆண்டிற்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கை சமர்பிக்கப்படுவதோடு சங்கத்தின் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுவதோடு  2017ஃ2018 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் இடம்பெறவுள்ளது.
எனவே இவ்பொதுக்கூட்டத்தில் அனைத்து சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைமாணவர்களும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துரைகளை வழங்கி சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்க வருமாறு; சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அனைத்து சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு
செயலாளர்-திரு. N.தினேஸ்குமார்-071-4402227
உப செயலாளர் திரு ளு.பவானந்தராஐh-0773760097