பாதுகாப்பான புகையிரத கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

0
185

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்ட்ட மாங்குளம் புகையிரத நிலையத்துக்கும் முறுகண்டி புகையிரத நிலையத்துக்கும் இடைப்பட்ட மக்கள் குடியிருப்புக்களில் புகையிரத கடவை அமைக்கப்படாத இடங்களுக்கு விரைவில் புகையிரத கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் தமக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர் இறுதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் இரண்டுதடவைகள் புகையிரத திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவே உரிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு தமக்கான பாதுகாப்பான கடவையை அமைத்து தருமாறு கோருகின்றனர்.

 

பாதுகாப்பான கடவை இல்லாததன் காரணமாக பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் உயிர் பயத்துடனேயே நடமாடுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்