தமிழர் என்றாலே இனவாதத்துடன் செயற்படுவதே சிலரின் நிலைப்பாடாகும்

0
213

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தமிழர் என்பதினாலேயே அவருக்கு எதிராக இன ரீதியில் குற்றம் சுமத்தப்படுகின்றது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

செய்தியாளர் :  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன திரு.ஆர்.பாஸ்கரலிங்கத்திற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டொன்றை சுமத்தியுள்ளார் . இவர் எல்ரீரீஈ க்கு நிதிஉதவி வழங்கியுள்ளார் என்றும் புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டானது தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஒப்பானது என்று செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் , தமிழர் என்றாலே இவ்வாறு இன ரீதியில் வகைப்படுத்துவதே இவர் போன்றோரின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்த அமைச்சர் இவருக்கு எதிராக எங்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மைக் முன்னாள் பேசுவதை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்றும் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன  சுட்டிக்காட்டினார்.