.புலிகள் ஏன் ஆயுதம் ஏந்­தினர் ! தென்­னா­பி­ரிக்­க விடு­தலை போராளி அருட்­தந்தை மைக்கல் லப்ஸ்லே

0
262

புலிகள் ஏன் ஆயுதம் ஏந்­தினர் என்ற கேள்­விக்கான பதிலை ஆரா­யாமல் நல்­லி­ணக்­கத்­திற்­கான பேச்­சு­வார்த்­­தை­களை எத்­தனை வரு­டங்­க­ளுக்கு தொட­ரப்­போ­கின்றோம்?
தென்­னா­பி­ரிக்­க விடு­தலை போராளி அருட்­தந்தை மைக்கல் லப்ஸ்லே

இலங்­கையில் 30 வரு­ட­ங்­க­ளாக இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு வந்­­துள்­ளது என்பதால் எல்­லாமே முடி­வுக்கு வந்­தது என்­று அர்த்­த­மல்ல, ஏன் யுத்தம் இடம்­பெற்­றது என்ற கேள்­விக்­கான பதிலை அர­சாங்கம் ஆராயவேண்டும் அத­னூ­டா­கவே நல்­லி­ணக்­கத்­திற்கு செல்ல வேண்டும். இப்போது துப்­பாக்­கிகள் மௌனித்­துள்­ளன என்று அனை­வரும் வெறு­மனே இருந்து விட முடி­யாது ஏனெனில் போராட்ட உணர்­வுகள் இன்னும் மௌனிக்கவில்லை என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­ளத்­தான் வேண்டும் என தென்­னா­பி­ரிக்­காவில் நிற­வெறி மற்றும் இன­ஓ­­துக்கல் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக போரா­டியவரும் தென்­னா­பி­ரிக்க தேசிய காங்­கிரஸ் உறுப்­பி­னருமான அருட்­தந்தை மைக்கல் லப்ஸ்லே வீர­கே­சரி நாளி­த­­ழுக்குத்தெ­ரி­வித்தார்.
அவர் தொடர்ந்து கருத்­துத்­தெ­ரி­விக்­கையில் தென்­னா­பி­ரிக்­காவில் 1994 ஆம் ஆண்டு நிற­வெறி மற்றும் இன ஒதுக்­கல் செயற்­பா­டுகள் முடி­வுக்கு வந்தவுடன் எல்­லாமே முடிந்து விட்­டது என நாம் மௌனிக்கவில்லை. அது தான் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான ஆரம்­ப­மாக இருந்­தது. கறுப்­பின மக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் குறித்து சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை மக்கள் மத்­தியில் பகி­ரங்­க­­மாக முன்­னெ­டுத்தோம். கடந்த காலத்தை மீட்­­டெ­டுத்தல் என்­பதே எமது தாரக மந்­தி­ர­மாக இருந்­தது.
ஆர்­ஜண்­டீனா மற்றும் கொலம்­பியா போன்ற இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களின் மூலம் நாம் பாடங்­களை கற்­றுக்­கொண்டோம். இதன் கார­ண­மாக சுமார் 23 ஆயிரம் மக்கள் ஆணைக்­கு­ழுக்­களின் முன்­பாக சாட்­சி­ய­ம­ளித்­தனர். இதில் 9 ஆயிரம் பேருக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. . தூண்­டு­தலின் பேரில் தாம் செய்த குற்­ற­ங்­களை ஏற்­றுக்­கொண்­டதால் அவர்கள் மன்­னிக்­கப்­பட்­டனர்.இது­பா­திக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யது இப்­போது இலங்கை பிரச்­சி­னைக்கு வருவோம். விடு­தலை புலி­களும் இலங்கை இரா­ணு­வத்­தி­னருக்கி­டையில் சண்டை  இடம்­பெற்­றது. இதில் புலிகள் இரா­ணுவ ரீதி­யாக தோற்­க­டிக்­கப்­பட்­டனர்.
இரு­த­ரப்பு மோதிக்­கொள்ளும் போது வெற்றி அல்­லது தோல்வி தானே பெறு­பே­றாக இருக்கும்? அப்­ப­டி­யானால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நாம் என்ன செய்­தி­ருக்­கிறோம்? ஏன் ஆயு­த­போ­ராட்டம் இடம்­பெற்­றது என்ப­தற்­கான மூல கார­ணத்தை (root cause) ஆரா­யாமல் நல்­லி­ணக்க பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு செல்­வது நியா­ய­மாக இருக்­குமா? யுத்தம் முடிந்­துள்­ளது துப்­பாக்­கிகள் மட்­டுமே மௌனித்­துள்­ளன ஆனால் போராட்ட உணர்வு இன்னும் மௌனிக்கவில்லை என்­பதை நாம் உண­ர­வேண்டும். ஆகவே நாம் எமது பிள்­ளைகள் அல்­லது பேரக்­கு­­­ழந்­தை­களை மறுபடி ஒரு யுத்­தத்­திற்கு பலி­கொ­டுக்க போகின்­றோமா என்­பதை சிந்­திக்க வேண்டும்.
தென்­னா­பி­ரிக்­காவில் நிற­வெறிக்கு எதி­ரான போராட்டம் முடி­வுக்கு வந்­தும் கூட பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் ரணங்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­வ­தற்கு இன்னும் நாம் போராட வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் நிகழ்­கா­லத்தை செழு­மை­யா­க்க எமக்கு கடந்த காலத்தை மீட்­டெ­­டுக்க வேண்­டி­யுள்­ளது. நிற­வெ­றியால் பாதிக்­கப்­பட்­ட­ ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் பல கதைகள் உள்­ளன ஆனால் அதை கேட்­ப­தற்கு தான் யாரு­மிருக்­க­வில்லை இப்­போது அதை கேட்­ப­தற்­காக நான் பய­ணித்­துக்­கொண்­டே இருக்­கி­றேன்.
இலங்­கை­யிலும் அவ்­வா­றான செயற்­பா­டுகள் தேவை. ஆற்­றுப்­ப­டுத்தல் என்­பது யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட ஒரு தலை­மு­றை­யி­னரை இலக்­காக வைத்து முன்­னெ­டுக்­கப்­­ப­டு­­வ­தல்ல அதை நாம் பல தலை­மு­றை­க­ளுக்கு செய்ய வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் சிறு­வர்­களும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் அந்த பிஞ்சு மனதில் உள்ள வடுக்­களை நாம் ஆற்­றுப்­ப­டுத்­த­வேண்டும். இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களை பார்த்து நாம் தென்­னா­பி­ரிக்­காவில்செ­யற்­பட்­டதை போன்று உலகில் ஏனைய நாடுகளின் படிப்­பி­னை­களை நாம் கற்­றுக்­கொள்ளல் அவ­சி­யம் என்றார்.

நிற­வெ­றிக்­கெ­­தி­ரான போராட்­ட காலத்தில் வௌ்ளை­யின ஆட்­சி­யா­ளர்­களால் 1990 ஆண்டு இவ­ருக்கு கடித வெடி­குண்­டொன்று அனுப்­பப்­பட்­ட­போது அது வெடித்­ததில் தனது இரண்டு கைக­ளையும் ஒரு கண்ணின் பார்­வையையும் இவர் இழந்­து விட்டார் என்­பது முக்­கிய விட­ய­மாகும்.

 

  • நன்றி வீரகேசரி