“ரன் லோலா ரன்” திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும்

0
485

சிறந்த சினிமா இரசனையுப் பண்பும் அறிவும் உள்ள திரைப்பட சமூகத்தினை உருவாக்கம் நோக்கில் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவக திரைப்பட சமூகம்(SVIAS Film Society) திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் எனும் தொடர் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக சிறுகதை எழுத்தாளரும் சினிமா மதிப்பீட்டாளருமான உமா வரதராஜன் அவர்களின் நெறிப்படுத்தலில் “அக்கம் பக்கம்” எனும்  உலகத் திரைப்படங்கள் சிலவற்றின் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு மாதந்தம் இரண்டு தடவை (இரண்டு புதன்கிழமைகளில்) தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன. அந்தவகையில் முதலாவது திரைப்படமாக “ரன் லோலா ரன்” (82 அin ஐ ஜேர்மன் ஐ 1998) திரையிடப்பட்டு காலந்துரையாடப்படவுள்ளது. இதன் மூலம் உலகத்திரைப்படங்களில் பரிச்சயத்தினை உருவாகி கருத்தியல், வடிவமைப்பு நுட்பங்கள் போன்ற அம்சங்களை அறிவதும் அலசுவதும் சிறந்த அனுபவமாக அமையும்.
திரைப்பட சமூகத்தின் ஏற்பாட்டில் 13.09.2017 அன்று இரண்டு மணி தொடக்கம் ஐந்து மணிவரை நிறுவக திரைப்பட கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.