இந்த நாட்டில் ஒவ்வொரு விடயங்களும் ஒரு நூல் அளவிலேதான் முன்னேறுகின்றன

0
167

இந்த நாட்டில் எந்தவொரு விடயத்தையும் செய்து முடிப்பதென்றால் வெறுமனே சொல்லிவிட்டு மட்டும் இருக்க முடியாது. தொடர்ச்சியாக அதனை முன்நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நாட்டில் விடயங்கள் எல்லாம் ஒரு நூல் கணக்கிலே தான் முன்னேறும் அதனைக் கருத்திற் கொண்டு நாம் எமது விடயங்களை முன்நகர்த்த வேண்டும். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகி கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை நாசிவன்தீவு பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டிடத் தெகுதியினைத் சனிக்கிழமை திறந்து வைக்கும் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

,
, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
,
,
, இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
,
,
, ஒரு கிராமத்திற்கு வைத்தியசாலை, வாசிகசாலை, பாடசாலை இந்த மூன்றும் மிக முக்கியமானவை. ஒரு வாசிகசாலையைத் திறந்து அதனைப் பயன்படுத்தாது பூட்டி வைப்பதென்பது அந்தக் கிராமத்திற்குப் பெருமையாக இருக்க மாட்டாது. குறிப்பாக மாணவர்கள் இதன் மூலம் உச்ச பலனைப் பெற வேண்டும். வாசிப்பு என்பது மனிதனுக்கு பொது அறிவினை வளரச் செய்யும். ஒரு வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளில் இரண்டு பரிட்சைகள் வைக்கப்படும் ஒன்று நுண்ணறிவு தொடர்பான பரீட்சை மற்றையது பொது அறிவு தொடர்பான பரீட்சை. நுண்ணறிவில் பலர் சித்தியடைந்து விடுவார்கள் ஆனால் பொது அறிவுக் கேள்விகளில் சித்தியடையத் தவறுகின்றார்கள்.
,
,
, அண்மையில் வேலையற்ற பட்டதாரிகளின் விடயத்திலும் அவ்வாறு தான் இடம்பெற்றது அவர்கள் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடையவில்லை. அதன் பின் தங்களுக்கு பரீட்சை வைக்க வேண்டாம் தொழில் வாய்ப்புத் தரும்படி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார்கள். மிகவும் சிரமப்பட்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்பு விடயத்தை மேற்கொண்டுள்ளோம் எனவே வாசிப்பின் மூலம் பொது அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் இதனை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நிறைவான அறிவு கிட்டும்;.
,
,
, இந்த நாட்டில் எந்தவொரு விடயத்தையும் செய்து முடிப்பதென்றால் வெறுமனே சொல்லிவிட்டு மட்டும் இருக்க முடியாது. தொடர்ச்சியாக அதனை முன்நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நாட்டில் விடயங்கள் எல்லாம் ஒரு நூல் கணக்கிலே தான் முன்னேறும் அதனைக் கருத்திற் கொண்டு நாம் எமது விடயங்களை முன்நகர்த்த வேண்டும்.
,
,
, எமது பிரதேசங்களிலே வேலை செய்வதென்பது மிகவும் நெருக்குவாரமான விடயமாகத் தான் இருக்கின்றது. இந்த முழு மாகாணத்தினுடைய மக்களும் எங்களிடம் தேவைகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கேற்ற வகையில் நாங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.