வடமராட்சியில் அதிகாலையில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்; மோட்டார் சைக்கிள் அபகரிப்பு

0
182

வடமராட்சி நெல்லியடி கப்பூது வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் கப்பூது வீதியில் நின்றுள்ளனர். கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு நால்வரும் தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாள்வெட்டுக் குழுவினர் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பியோடிய நால்வரும் பின்னர் இந்தப் பகுதிக்கு வந்து கொத்தப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்னர். இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

thinakkural