அபிவிருத்தியில் முஸ்லிம் பிரதேசங்கள் மேடு போலும் தமிழ் பிரதேசங்கள் பள்ளம் போலும் காட்சியளிக்கின்றன.

0
810

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பனர் ச.வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“அண்மையில் ஏறாவூர் எல்லை நகர் கிராமத்திலுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் பெயர்கள் அந்தக் கிராம பதிலிருந்து நீக்கப்பட்டு, ஐயங்கேணி முஸ்லிம் கிராமசேவகர் பிரிவில் பதியப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை நாங்கள் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் பேசி உடனடியாக தடுத்து நிறுத்தினோம். இது முதலாவது திட்டமிட்ட காய்நகர்த்தல்.

“தமிழ் மக்கள் பூர்விக்மாக வாழ்ந்துவருகின்ற  பகுதிகளை கபழிகரம் செய்யும் அல்லது மாற்ற முற்படும் நடடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

“ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட முஸ்லிம் சமூகம் வாழுகின்ற பகுதிகள் நகர சபையினால் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், ஏறாவூர் நகர சபைக்குள் வருகின்ற தமிழ் கிராங்கள் வீதி விளக்குகள் இல்லை, கால்வாய்கள் துப்பரவில்லை, குப்பைகள் ஒழுங்காக அகற்றப்படுவதில்லை வீதிகள் புனரமைக்கப்படவில்லை. அபிவிருத்தியில் முஸ்லிம் பிரதேசங்கள் மேடு போலும் தமிழ் பிரதேசங்கள் பள்ளம் போலும் காட்சியளிக்கின்றன.

“இந்த நிலையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் தமிழ் கிராமங்களை ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுடன் இணைக்க முற்படுகிறார்கள் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்றார்..